நாட்றம்பள்ளி அருகே லாரி மீது கார் மோதி விபத்து: கணவன், மனைவி உயிரிழப்பு

நாட்றம்பள்ளி அருகே லாரி மீது கார் மோதி விபத்து: கணவன், மனைவி உயிரிழப்பு
X

நாட்றம்பள்ளி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்தில் கணவன் மனைவி உயிரிழந்தனர்.

நாட்றம்பள்ளி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து. கணவன் மனைவி உயிரிழப்பு போலீசார் விசாரணை.

நாட்றம்பள்ளி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்து. கணவன் மனைவி உயிரிழப்பு. நாட்டறம்பள்ளி போலீசார் விசாரணை.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத ஆத்தூர்குப்பம் பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஈச்சர் லாரி ஒன்று ஓரமாக திருப்பியபோது பின்னால் வந்த சொகுசு கார் ஒன்று ஈச்சர் லாரி பின்னாடி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் வந்த சென்னை ஜீவன் பீமா நகர் பகுதியைச் சேர்ந்த அனில் வாலியா, அவரது மனைவி மஞ்சு வாலியா ஆகியோர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாட்றம்பள்ளி இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஜெயலட்சுமி காரில் சிக்கிக் கொண்டிருந்த இரண்டு உடலையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய ஈச்சர் லாரி ஓட்டுநர் திருப்பத்தூர் பாச்சல் பகுதியை சேர்ந்த நித்யானந்தம் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்றம்பள்ளி அருகே ஈச்சர் லாரி மீது கார் மோதிய விபத்தில் கணவன் மனைவி இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Tags

Next Story
ai marketing future