திருப்பத்தூர் அருகே அழுகிய நிலையில் வாலிபர் சடலம் மீட்பு
தூக்கில் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட செந்தில்
திருப்பத்தூர் மாவட்டம் புதூர் பூங்குளம் அடுத்த புதூர் நாடு மலைப்பகுதியில் உள்ள பெருமாள் கோயிலில் அழுகிய நிலையில் தூக்கில் தொங்கிய வாலிபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
புதூர் பூங்குளம் பகுதியில் உள்ள பூசாரி வெங்கடேசன் வாரந்தோறும் சனிக்கிழமை நாளில் மலைப்பகுதியில் உள்ள திருப்பதி பெருமாள் கோயிலுக்குச் சென்று பூஜை செய்து வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த வாரம் மழை அதிகமாக இருந்ததால் பூசாரி வெங்கடேசன் கோயிலுக்கு செல்லாமல் இருந்துள்ளார். இன்று சனிக்கிழமை என்பதால் காலை கோயிலுக்கு பூஜை செய்ய சென்ற பூசாரிவெங்கடேசன் அழுகிய நிலையில் வாலிபரின் பிணம் தூக்கில் தொங்கியவாறு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார் அங்கு வந்த வனக்காப்பாளர் பெருமாள் மற்றும் வன காவலர் அசோகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்து திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் உதவி ஆய்வாளர் அகிலன் விசாரணை மேற்கொண்டார்.
இந்த நிலையில் திருப்பத்தூர் வெங்களாபுரம் அடுத்த அண்டி வட்டம் பகுதியை சேர்ந்த சேகர் மகன் செந்தில் ( வயது 33) பெங்களூரு பகுதியில் மேஸ்திரி வேலை செய்யும் இவருக்கு குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த அனுபிரியா என்பவருடன் திருமணமாகி இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. கணவன் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் செந்தில் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கம்போல வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. செந்தில் காணாமல் போயுள்ளார் என திருப்பத்தூர் கிராம காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகார் அடிப்படையில் போலீசார் தேடி வந்த நிலையில் தற்பொழுது தூக்கில் தொங்கிய இருந்த செந்தில் என்பவர்தான் என காவல்துறை உறுதிப்படுத்தினர் அதன் அடிப்படையில் செந்திலின் உறவினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அங்கு வந்த உறவினர்கள் செந்தில் தான் என கூறி அழுது உள்ளனர் அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சடலத்தை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu