திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட தாலுகா அலுவலகம் முன்பு நகர பாஜக சார்பில் நகராட்சி நிர்வாகத்தின் செயலை கண்டித்து நகர தலைவர் அருள்மொழிவர்மன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட பாஜக தலைவர் வாசுதேவன் கலந்து கொண்டு நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது மாவட்ட தலைவர் வாசுதேவன் பேசியதாவது:- திருப்பத்தூர் நகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக பாதாளச் சாக்கடை திட்டம் முழுமை பெறாமல் நகராட்சி பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும் நகராட்சி நிர்வாகம் சார்பில் காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் முறையாக குடிநீர் விநியோகம் செய்வதில்லை, தற்போது கொரேனா வைரஸ் தொற்று காலம் ஆனால் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள கழிவுநீர் கால்வாய்கள் முறையாக தூர்வாரும் பணி செய்யாமல் இருப்பதால் மழைநீர் தேங்கி மழைநீருடன் கழிவுநீர் கலந்து பல்வேறு நோய்த்தொற்று ஏற்படுகிறது,
மேலும் கிருஷ்ணகிரி சாலையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான சுடுகாட்டில் இறந்தவர்களை புதைக்க நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்குவதில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது. எனவே இதுபோன்ற அராஜக செயலில் ஈடுபடும் நகராட்சி நிர்வாகத்தை பாஜக வன்மையாக கண்டிக்கிறது என பேசினார்.
இதில் மாவட்ட துணை தலைவர் வக்கீல் அன்பழகன், எஸ்டி பிரிவு தலைவர் முத்துராமன், மாவட்ட பொதுச்செயலாளர் ஈஸ்வரன், கண்ணன், உட்பட பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu