மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பாதுகாப்பையும் மீறி தொடரும் தற்கொலை முயற்சி

மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பாதுகாப்பையும் மீறி தொடரும் தற்கொலை முயற்சி
X

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பை மீறி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

திருப்பத்தூரில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் போலீஸ் பாதுகாப்பையும் மீறி ஒரு பெண் தீக்குளிக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது

திருப்பத்தூர் மாவட்டம் கொரட்டி அடுத்த குமாரன் பட்டி பகுதியில் வசிப்பவர் தயாளன் மகன் மேகநாதன் (35). இவர் கடந்த வாரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மனு கொடுக்க வந்த பொழுது தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை திடீரென தலை மீது ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று திங்கள் கிழமை என்பதால் மாவட்ட ஆட்சியர் கூடுதல் வளாகத்தில் வழக்கமாக நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு மனு கொடுக்க வரும் ஒவ்வொருவரையும் தீவிர சோதனை செய்யப்பட்ட பின்பே உள்ளே அனுமதித்தனர்.

அதையும் மீறி வாணியம்பாடி காஜா நகர் பகுதியைச் சேர்ந்த புரானுள்ளா மனைவி பர்வீன் பானு இவருடைய மகள் அர்ஷியாவுடன் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு கொடுக்க வந்திருந்தார்,

அப்பொழுது, பத்து வருடமாக தன்னுடைய கணவர் புரானூள்ளாவிற்கு வேலை கொடுக்காமல் அலைக்கழிக்கும் வாணியம்பாடி இஸ்லாமிய ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை கண்டித்தும், வேலை கொடுப்பதற்கு 5 லட்சம் லஞ்சம் கேட்டு கட்டாயப்படுத்துவதாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் பாதுகாப்பையும் மீறி தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தார்.

இந்த சம்பவம் மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு