வீட்டை பாம் வைத்து தகர்க்க முயற்சி, மாமனார் வெறிச் செயல்

வீட்டை பாம்  வைத்து தகர்க்க முயற்சி, மாமனார் வெறிச் செயல்
X

சொந்த மகள், மருமகன் குடும்பத்தை ஜெலட்டின் குச்சிகளைக் கொண்டு பாம் வைத்து கொலை செய்ய முயன்றார் மாமனார்.( கைப்பற்றப்பட்ட ஜெலட்டின்)

மகள்,மருமகன் குடும்பத்தையே பாம் வைத்து கொலை செய்ய முயன்ற மாமனாரை போலீசார் தேடிவருகின்றனர்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கொண்டநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த சேட்டு இவருடைய மகன் நரசிம்மன் (30) மாம்பழம் விதை தொழில் செய்து வருகிறார்.

இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த ராஜா (60) வசித்து வருகிறார் இவருக்கு இரண்டு மனைவி முதல் மங்கைக்கு நந்தினி (30) யுவராஜ் (28) கார்த்திக் (24) ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளன.


இரண்டாவது மனைவி வளர்மதி இவருக்கு அனிதா (27) அகிலா(24) அஜித் (24) என மூன்று பிள்ளைகள் உள்ளன ராஜாவின் இரண்டாவது மனைவி மகளான அனிதாவை நரசிம்மன் ஐந்து வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.

ராஜா தனக்கு சொந்தமான சொத்தை விற்று விட்டதாக தெரிகிறது. அதனை பெரியசாமி என்ற நபரிடமிருந்து நரசிம்மன் நான்காவது ஆளாக சுமார் 45 லட்சத்திற்கு வாங்கி உள்ளார்.

இதனால் ராஜா தனது சொத்தை மருமகனே வாங்கி விட்டாரே என்று ஆத்திரத்தில் பலமுறை நரசிம்மன் மற்றும் அவரது மகளான அனிதாவிடம் பலமுறை எனது பெயரில் எழுதி வைக்கக் கோரி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

அதனைத் தொடர்ந்து இன்று நரசிம்மன் குடும்பத்தை முழுவதுமாக ஒழித்துக் கட்ட முடிவு செய்த ராஜாவின் முதல் மனைவியின் மகன்களான யுவராஜ் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரும் தூண்டிவிட்டு நரசிம்மன் வீட்டில் சுமார் 20 (ஜலடின்குச்சி) நாட்டு வெடிகுண்டை சமையலறையின் மேல்வைத்து கட்டிவிட்டு 500 மீட்டர் தொலைவில் உள்ள மின்கம்பத்தில் ஒயர் மூலம் கனெக்ஷன் கொடுக்க பார்த்துள்ளனர்.


அப்போது விடியற்காலை 3 மணி அளவில் வீட்டின் வெளியே படுத்திருந்த சேட்டு ஏதோ சத்தம் கேட்பது அறிந்து வெளியே சென்று பார்த்தபோது கார்த்திக் மற்றும் யுவராஜ் சமையலறையில் நாட்டு வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு இருந்தனர் அதனால் சேட்டு சத்தம் போடுவதை அறிந்த இருவரும் கீழே குதித்து தப்பி ஓடியுள்ளனர்.

அதன் பின்னர் ஒயரை துண்டித்து விட்டு இருவரையும் சேட்டு துரத்திச் சென்று உள்ளனர் அப்போது 500 அடி தொலைவில் மின் கம்பத்தில் மின்சாரம் கொடுக்க இருந்ததை கட் செய்து விட்டுகந்திலி போலீசாருக்கு சேட்டு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சமையலறையில் கட்டப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டை பத்திரமாக மீட்டு எடுத்துக்கொண்டு யுவராஜ் மற்றும் கார்த்திக் ஆகிய இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்

சொத்து தகராறு காரணமாக தன் சொந்த மகளையே நாட்டு வெடிகுண்டு வைத்து கொல்ல முயற்சி செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
நாமகிரிப்பேட்டையில் பெண் ஐ.டி ஊழியர் மீது தாக்குதல் - குற்றவாளி கைது