அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்யப்பட்ட வழக்கறிஞர்களுக்கு நியமன ஆணை

அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்யப்பட்ட வழக்கறிஞர்களுக்கு நியமன ஆணை
X

அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்யப்பட்ட வழக்கறிஞர்களுக்கு நியமன ஆணை 

புதிய அரசு வழக்கறிஞர்களாக நியமனம் செய்யப்பட்ட வழக்கறிஞர்களுக்கு நியமன ஆணையை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய நீதிமன்றங்களுக்கு புதியதாக அரசு தரப்பு வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.

இதில் 10 அரசு வழக்கறிஞர்களுக்கு நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இதில் அரசு வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டுள்ள செந்தில்வேலன், சரவணன், வீரமணி, ராஜா, சரவணன், உட்பட அரசு வழக்கறிஞர்கள், திமுக நகர செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!