திருப்பத்தூர் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

திருப்பத்தூர் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
X

திருப்பத்தூர் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு, Anti-child labour day, Collectorate,

இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு மாவட்ட ஆட்சியர் சிவன்அருள் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து அலுவலர்களும் இதில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் குழந்தைத் தொழிலாளர்களாக மீட்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு SRDPS பெண்கள் மற்றும் குழந்தைகள் இல்லம் சார்பாக அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் 10 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. நிவாரணப் பொருட்களை SRDPS இயக்குநர் தமிழரசி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் வழங்கினார்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் ஏற்பாடு செய்திருந்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!