திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக  அமர் குஷ்வாஹா பொறுப்பேற்று கொண்டார்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக  அமர் குஷ்வாஹா பொறுப்பேற்று கொண்டார்
X

திருப்பத்தூர் கலெக்டர் அமர் குஷ்வாஹா

திருப்பத்தூர் மாவட்டத்தின் 2 வது மாவட்ட ஆட்சியராக  அமர் குஷ்வாஹா பொறுப்பேற்று கொண்டார்

வேலூர் மாவட்டம்மாக செயல்பட்டு வந்த நிலையில் நிர்வாக வசதிக்காக அதனை மூன்றாக பிரிக்கப்பட்டு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என செயல்படும் என அறிவிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டமாக உதயமான முதல் திருப்பத்தூர் ஆட்சியராக சிவனருள் பொறுப்பேற்றுக் கொண்டு ஒன்றரை ஆண்டு பணி செய்து வந்தார்

அதனை தொடர்ந்து தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் பதிவுத்துறை ஜெனரல் இன்ஸ்பெக்டராக பணி மாற்றம் செய்யப்பட்டார். திருப்பத்தூர் மாவட்டத்திற்கு ஊரக வளர்ச்சித் துறையில் இருந்த அமர் குஷ்வாஹா நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அமர் குஷ்வாஹா திருப்பத்தூர் மாவட்டத்தின் இரண்டாவது ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்

முன்னதாக அவருக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு கொடுத்தனர்

அதனை தொடர்ந்து பத்திரிக்கையாளர் சந்தித்து பேசிய ஆட்சியர் தற்போது கொரோனா தொற்றுள்ளதால் அனைவரும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கொரோனா தொற்றில் இருந்து தங்களை பொதுமக்கள் பாதுகாத்துக் கொள்ள கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
ai in future agriculture