திருப்பத்தூரில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து அதிமுக ஆலோசனை கூட்டம்

திருப்பத்தூர் ஒன்றிய அதிமுக அலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான கே.சி.வீரமணி கலந்து கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுக்கோட்டை, பள்ளவள்ளி, ஜம்மணபுதூர், பெருமாபட்டு உள்ளிட்ட 11 ஊராட்சிகளில் உள்ளாட்சி தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் ஒன்றிய செயலாளர் பி.கே.சிவாஜி தலைமையில் நடைப்பெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், திருப்பத்தூர் அதிமுக மாவட்ட செயலாளரும்மான கே.சி.வீரமணி கலந்து கொண்டார். அப்போது பேசியதாவது.
அதிமுக கட்சி உருவான போது கருணாநிதி இந்த கட்சி எம்.ஜி.ஆர். படம் போல் 10 நாட்கள் அல்லது 100 நாட்கள் ஓடுவது போல் ஓடி காணாமல் போய்விடும் என கூறினார்.
ஆனால் சுதந்திர தமிழ்நாட்டில் அதிக நாட்கள் ஆட்சி ஆண்ட கட்சி அதிமுக எனவும் விரைவில் 50ஆம் ஆண்டு நூற்றாண்டு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட போகிறது என்றார்.
மேலும் மக்கள் பணியில் ஈடுபாட்டோடு இருக்கும் கட்சி அதிமுக எனவே இளைஞர்களின் அடையாளமாக உருவாக அதிமுக உறுதுணையாக இருக்கும் என அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் திருப்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ்,தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் நாகேந்திரன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் டி.டி.சி.சங்கர், மருத்துவர் அணி மாவட்ட செயலாளர் வாசுதேவன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் செல்வம், உள்ளிட்ட ஏராளமான அதிமுக பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu