திருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு அரசு பேருந்தை சிறைப்பிடித்து மக்கள் போராட்டம்

திருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு அரசு பேருந்தை சிறைப்பிடித்து மக்கள் போராட்டம்
X

திருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு அரசு பேருந்தை சிறைப்பிடித்து மக்கள் போராட்டம்

திருப்பத்தூர் அருகே பொம்மிகுப்பம் ஊராட்சியில் குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி அரசு பேருந்தை பொதுமக்கள் சிறைப்பிடித்தனர்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பொம்மிகுப்பம் ஊராட்சி பாலதோட்டம் வட்டத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் தங்கள் பகுதி கடந்த மூன்று மாதங்களாக முறையான குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருப்பத்தூர்-ஏழுருவி சாலையில் வந்த அரசு பேருந்தை சிறைப்பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது ஊராக வளர்ச்சி துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் முறையான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறியதின் பேரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது...

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!