திருப்பத்தூரில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

திருப்பத்தூரில் அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
X

திருப்பத்தூரில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் 

திருப்பத்தூரில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள், ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினார்

திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட ஹவுசிங் போர்டு பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் நகரம், கந்திலி கிழக்கு ஒன்றியம் மற்றும் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அதிமுக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான ஆலோசனை கூட்டம் நகர செயலாளர் டி.டி.குமார் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி பங்கேற்று கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அதிமுக நிர்வாகிகளுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தி விட்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்பொழுது பேசிய கே சி வீரமணி வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் சிறப்பாக செயல்பட வேண்டும் நாம் வெற்றி பெற வேண்டும் என தொண்டர்கள் மத்தியில் பேசினார். இந்த கூட்டத்தில் கந்திலி ஒன்றிய செயலாளர் மணிகண்டன், திருப்பத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜி.ரமேஷ் உள்ளிட்ட மாவட்ட,நகர,ஒன்றிய பொறுப்பாளர்கள் உட்பட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது