திருப்பத்தூர் அருகே பைக் மீது  மினி வேன் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

திருப்பத்தூர் அருகே பைக் மீது  மினி வேன் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு
X

விபத்தில் சிக்கிய  மினி பேருந்து 

திருப்பத்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது  மினி வேன் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு. 10 பேர் படுகாயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து மேல்மருவத்தூர் பகுதிக்கு மினி வேனில் 22 பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பத்தூர் மாவட்டம் வெங்களாபுரம் பகுதியில் மினி வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது, எதிரே பசிலிக்குட்டை பகுதியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி வந்த இரு சக்கர வாகனமும் மினி வேன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் இருசக்கர வாகனத்தில் வந்த ரஜினி மகன் விக்னேஷ் (வயது 16 ) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவருடன் வந்த அருண் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேலும் மினி பேருந்தில் பயணம் செய்த 10 பயணிகளுக்கு படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்த நபர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!