உள்ளாட்சித்தேர்தல்: கந்திலி ஒன்றியத்தில் இன்று 84 பேர் வேட்புமனு தாக்கல்

உள்ளாட்சித்தேர்தல்: கந்திலி ஒன்றியத்தில் இன்று 84 பேர் வேட்புமனு தாக்கல்
X
திருப்பத்தூர் மாவட்ட உள்ளாட்சித்தேர்தலில் கந்திலி ஒன்றியத்தில் இன்று 84 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற 6,9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது,

அதனையடுத்து கடந்த 15 ந்தேதி முதல் தேர்தலில் போட்டியிடுவோர் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர், வரும் 22ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்.

இந்நிலையில் கந்திலி ஒன்றியத்தில் இன்று (21.09.2021) மாவட்ட கவுன்சிலருக்கு 1 பேரும், ஒன்றிய கவுன்சிலருக்கு 9 பேரும், ஊராட்சி மன்றத் தலைவருக்கு 11 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 63 பேரும் வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளனர்,

கடந்த ஐந்து நாட்களில் மாவட்ட கவுன்சிலருக்கு 10 பேரும், ஒன்றிய கவுன்சிலருக்கு 64 பேரும், ஊராட்சி மன்றத் தலைவருக்கு 107 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 612 பேரும் இதுவரை தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து உள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!