திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக ரூ.6.82 லட்சம் அபராதம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக 6 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது..
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா அனைத்து துறை அலுவலர்களுக்கும் கொரோனா கட்டுப்பாட்டை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில், வழிகாட்டு நெறிமுறைகளான முகக் வசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாத நபர்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டிருந்தார். அதனடிப்படையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று பொது சுகாதார துறையின் சார்பில் 1 நபருக்கு ரூ.500 அபராதமும் காவல் துறையின் சார்பில் 1313 நபர்களுக்கு ரூ.6,56,500 அபராதமும், வருவாய்த் துறையின் சார்பில் 9 நபர்களுக்கு ரூ.4,500 அபராதமும், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் 4 நகராட்சிகள் 3 பேரூராட்சிகள் 6 ஊராட்சி ஒன்றியங்களில் 41 நபர்களுக்கு ரூ.20,500 அபராதமும் என மொத்தம் 1,364 நபர்களுக்கு ரூ. 6 இலட்சத்து 82 ஆயிரம் அபராதமாக விதித்து வசூல் செய்யப்பட்டுள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu