இம்மாத இறுதிக்குள் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

இம்மாத இறுதிக்குள் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
X

தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

இம்மாத இறுதிக்குள் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் கொரோனா காலகட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மளிகை தொகுப்பு மற்றும் பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மளிகை தொகுப்பினை வழங்கினர் அதனை தொடர்ந்து பள்ளி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டினார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளரை சந்தித்து அமைச்சர் இம்மாத இறுதிக்குள் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கு போதிய அளவில் கல்வி அளிக்க அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளில் அடிப்படை வசதிகளையும் கட்டமைப்புகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. வரும் நிதி நிலை அறிக்கையில் கல்விக்காக பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டு வர இருப்பதாகவும் அவர் கூறினார்.

கொரானா வைரஸ் தொற்றின் காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதால், தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக ஏற்கனவே அரசும் நீதிமன்றமும் தெளிவாக தெரிவித்துள்ளது. எனவே, அதனையும் மீறி தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக ஆதாரபூர்வமான புகார்கள் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகள் திறப்பது தொடர்பாக சுகாதாரத்துறையினருடன் மூலம் பேசி பின்னர் அறிவிக்கப்படும். தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தக் கூடாது என்பதில் தமிழக முதலமைச்சர் உறுதியாக உள்ளார். எனவே அதற்கேற்றார் போல் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
the future of ai in healthcare