திருப்பத்தூர் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை: சாலைகளில் தேங்கிய வெள்ளம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை: சாலைகளில் தேங்கிய வெள்ளம்
X

கனமழை பெய்ததால் சாலைகளில் தேங்கிய நீர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 மணி நேரத்திற்கு மேலாக நீடித்து கன மழையால் விவசாயிகள் மகிழ்ச்சிடைந்துள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரென மாலையில் குளிர்ச்சி காற்று வீச தொடங்கியது.

அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி ஆம்பூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக கன மழை கொட்டித் தீர்த்தது.

இதனால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மழை நீருடன் கழிவு நீரும் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்கள அவதிக்குள்ளாகினர்.

இந்த மழை 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!