திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் செயல்படாது: கலெக்டர் தகவல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் செயல்படாது: கலெக்டர் தகவல்
X

திருப்பத்தூர் கலெக்டர் அமர் குஷ்வாஹா

ஆசிரியர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளதால் திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் செயல்படாது என அறிவிப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் 2021 அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்பு நாளை 29.09.2021 புதன்கிழமை அன்று நடைபெறவுள்ளது.

ஆசிரியர்கள் தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்புக்கு செல்லவிருப்பதால், அன்று அனைத்து வகை பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. எனவே மாணவர்கள் எவரும் பள்ளிக்கு வருகைபுரிய தேவையில்லை என்றும் 30.09.2021 வியாழக்கிழமை அன்று வழக்கம்போல் அனைத்து பள்ளிகளும் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
ai automation in agriculture