நாட்றம்பள்ளி அருகே 5 அடி நீளமுள்ள பாம்பு மீட்பு
பாம்பை பிடிக்கும் பணியில் தீயணைப்பு வீரர்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறபள்ளி அடுத்த புகையிலைக்காரன் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் நேற்று இரவு தனது வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது 5 அடி நீளம் உள்ள நாகப்பாம்பு படுத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையிலான படை வீரர்கள் விரைந்து சென்று நாக பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனைப் பெற்றுக் கொண்ட வனத்துறையினர் அருகில் உள்ள காப்பு காட்டிற்கு கொண்டு சென்று பத்திரமாக விட்டனர்.
3-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் பேரூராட்சியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அவர்களே அகற்றிக் கொள்ள, கால அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இதனை தொ டர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்கூட்டியே அவர்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நெடுஞ்சாலை துறை திருப்பத்தூர் உதவி கோட்ட பொறியாளர் அன்பு எழில், உதவி பொறியாளர் ஞானசேகர் மற்றும் வருவாய் துறையினர் பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர். ஆலங்காயம் பஸ் நிலையம் முதல் ராஜபா ளையம் கூட்ரோடு வரை, ஜமுனாமரத்தூர் செல்லும் சாலை, வாணியம்பாடி சாலை திருப்பத்தூர் சாலை ஆகிய இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து இன்றும் 3-வது நாளாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது. சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்களுக்கும், போக்கு வரத்திற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
ஆம்பூர் அருகே நாளை அறிவித்த மின் நிறுத்தம் அறிவிப்பு ரத்து
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள குமாரமங்கலம், வீராங்குப்பம், கரும்பூர், மலையாம்பட்டு, தென்னம்பட்டு, காட்டு வெங்கடாபுரம், இராமாபுரம், கதவாளம் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நாளை மின் நிறுத்தம் என மின்வாரிம் சார்பில் இருந்து தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அந்த மின் நிறுத்தம் அறிவிப்பு ரத்து என மின்சார துறை சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu