திருப்பத்தூர் மாவட்டத்தில் நான்கு தேர்வு மையங்களில் காவலர் தேர்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் நான்கு தேர்வு மையங்களில் காவலர் தேர்வு
X
திருப்பத்தூர் மாவட்டத்தில் நான்கு தேர்வு மையங்களில் காவலர் தேர்வு நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நான்கு தேர்வு மையங்களில் காவலர் தேர்வு நடைபெற்றது.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு மூலம் 3,359 காலி பணியிடங்களை நிரப்பிட 2ஆம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்புத்துறை பணியாளர் அனைத்திற்கும் நேற்று தேர்வு நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

இதில் திருப்பத்தூரில் தூய நெஞ்ச கல்லூரியில் 1,200 பேர், வாணியம்பாடியில் உள்ள பிரியதர்ஷினி கல்லூரியில் 1,300 பேர், இஸ்லாமிய பெண்கள் கல்லூரியில் 1,500 பேர், மருதர் கேசரி ஜெயின் மகளீர் கல்லூரியில் 1,378 பேர் என ஆண்கள் 4335 பேர், பெண்கள் 1043 பேர் என மொத்தம் 5,378 பேர் தேர்வு எழுதினர்.

இந்த எழுத்துத்தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 12. 40 மணி வரை நடைபெற்றது. காலை முதலே ஏராளமானோர் தேர்வு மைய நுழைவு வாயலில் நிண்ட வரிசையில் காத்திருந்து தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டனர். மேலும் பாதுகாப்பு பணிக்காக 500க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!