திருப்பத்தூர் மாவட்டத்தில் கருவிழி ஸ்கேன் செய்யும் புதிய சாதனம்: 70 பேருக்கு பயிற்சி
ரேஷன் கடைக்கு வழங்கப்பட்ட புதிய சாதனம்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 லட்சத்திற்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ள நிலையில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், நாட்றம்பள்ளி ஆகிய 4 தாலுக்காகளிலும் பெரும்பாலான குடும்ப தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் கை ரேகை பதிவு ஆகவில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.
அதன் அடிப்படையில் இதற்கு முன்னதாக இருந்த சாதனத்தை பெற்றுக் கொண்டு கை ரேகை, கண் விழி பதிவு ஸ்கேன் செய்யும் வசதி கொண்ட சாதனத்தை ரேசன் கடை ஊழியர்களுக்கு வழங்கினர். அதற்கு முன்னதாக எவ்வாறு அதனை பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் விற்பனையாளர்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விளக்கம் அளித்தனர்.
முதற்கட்டமாக வாணியம்பாடி வட்டாரத்தில் 19 சாதனங்கள், ஆம்பூர் பகுதிக்கு 51 சாதனங்கள் என மொத்தம் 70 சாதனங்கள் முதற்கட்டமாக விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட சப்ளை அதிகாரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த கந்திலி ஒன்றியம் பெரிய கசிநாயக்கன்பட்டி பகுதியில் அரசுக்கு சொந்தமான சாலையோரம் உள்ள பகுதிகள் சில நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் அப்பகுதியில் அடிக்கடி சாலை விபத்து ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் தற்போது ஆக்ரமிப்புகளை அகற்றும் பணியில் இன்று பொதுப்பணித்துறை கோட்ட பொறியாளர் முரளி தலைமையில் அதிகாரிகள் சென்று ஆக்கிரமிப்பு பகுதிகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி வருகின்றனர்.
வாணியம்பாடி நகராட்சி சார்பில் தூய்மை விழிப்புணர்வு
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகராட்சி சார்பில் தூய்மை விழிப்புணர்வு வாணியம்பாடி நகராட்சி சார்பில் நகரத்தை தூய்மையாக வைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தூய்மை இந்தியா 2. 0 திட்டத்தின் கீழ் நகரத்தினை எவ்வாறு தூய்மையாக வைப்பது என்பது குறித்து பொது மக்களுக்கு நகராட்சி ஊழியர்களால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் நெகிழி போன்ற கழிவுகளை பொதுமக்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சென்னைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளான தண்ணீர், பால் பவுடர், பிஸ்கட் அரிசி,கோதுமை உள்ளிட்ட உணவுப் பொருள்கள், மருந்து பொருள்கள் மற்றும் பாய், போர்வை உள்ளிட்ட நிவாரண பொருள்கள் எடுத்து செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கரபாண்டியன் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது செல்வம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu