/* */

திருப்பத்தூர் மாவட்டத்தில் நீட் தேர்வு வருகிற 12-ஆம் தேதி நடைபெற உள்ளது

திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகிற 12-ஆம் தேதி நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் கூறினார்

HIGHLIGHTS

திருப்பத்தூர் மாவட்டத்தில் நீட் தேர்வு வருகிற 12-ஆம் தேதி நடைபெற உள்ளது
X

திருப்பத்தூர் கலெக்டர் அமர் குஷ்வாஹா

திருப்பத்தூர் மாவட்டத்தில் நீட் தேர்வு 2021 வருகிற 12ம் தேதி ஞாயிற்று கிழமை பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வு வாணியம்பாடி - திருப்பத்தூர் ரோட்டில் அமைத்துள்ள மருதர்கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் 900 தேர்வர்களும், ஏலகிரி மலையில் உள்ள டான்பாஸ்கோ இருபாலர் கல்லூரியில் 900 தேர்வர்களும் ஆக மொத்தம் 1800 தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர்.

12ம் தேதி அன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர், தேர்வு பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பித்து மாலை 5 மணிக்கு முடிவடையும்.

வேலூர் மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த தேர்வர்கள் தங்களுடைய தேர்வு மையத்திற்கு செல்ல ஏதுவாக வேலூர் - ருப்பத்தூர் வழித்தட பேருத்தில் வந்து, தேர்வு எழுதும் தேர்வர்கள் மருதர் கேசரி ஜெயின் கல்லூரி பஸ் நிறுத்தத்தில் இறங்கவும்.

ஏலகிரி டான்போஸ்கோ கல்லூரியில் தேர்வெழுதும் தேர்வர்கள் பொன்னேரி கூட்ரோடு பஸ் நிறுத்ததில் இறங்கி, பின்னர் ஏலகிரிக்கு செல்லும் சிறப்பு பேருந்தில் ஏலகிரி டான்போஸ்கோ கல்லூரிக்கு செல்ல வேண்டும்.

அதே போல் கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுபுற பகுதியிலிருந்து வரும் தேர்வர்கள் வாணியம்பாடி- திருப்பத்தூர் பைபாஸ் ரோட்டில் இறங்கி, அங்கிருந்து ஏலகிரிக்கு செல்லும் சிறப்பு பேருந்தில் தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஏலகிரி மலை டான் போஸ்கோ கல்லூரியில் 12 ம் தேதி அன்று நீட் தேர்வு நடைபெறவுள்ளதால் தேர்வு நாளன்று நீட் தேர்வு எழுத வரும் தேர்வர்களின் வாகனங்கள் மட்டுமே, ஏலகிரி மலை செல்ல அனுமதிக்கப்படும். சுற்றுலா வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

எனவே அன்று பொதுமக்கள் ஏலகிரிக்கு சுற்றுலா செல்ல வரவேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது.

தேர்வு ஏற்பாடுகள் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின், தேர்வு நாளன்று வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி உதவி எண் 8825887756 (செல் எண் 9442825147), ஏலகிரி மலை டான்போஸ்கோ இருபாலர் கல்லூரி உதவி எண் 7094214511 (செல் பேசி எண்.9629880557) மற்றும் நீட் தேர்வு நகர் ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.சரவணன் (செல்பேசி எண். 9444414787, 9080130567 ) ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

Updated On: 9 Sep 2021 1:51 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  4. குமாரபாளையம்
    ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாம்...
  5. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    மனைவிக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  8. ஈரோடு
    ஆசனூரில் சாலையில் முறிந்து விழுந்த மூங்கில் மரங்களால் போக்குவரத்து...
  9. வீடியோ
    மேடையிலேயே Cool Suresh செய்த சேட்டை அதிர்ச்சியில் உறைந்த நடிகைகள்...
  10. வீடியோ
    🔴LIVE :இளைஞர்களின் உணர்வுகளையும்,தியாகத்தையும் சீமான் வியாபாரம்...