திருப்பத்தூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கில் வெறிச்சோடிய சாலைகள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கில் வெறிச்சோடிய சாலைகள்
X

வாணியம்பாடியில் வாகன தணிக்கையில் காவல்துறையினர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது

கொரோனா நோய்தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்த நிலையில் 3-வது ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் 400க்கும் மேற்பட்ட போலீசார் 30 இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு சோதனை செய்து வருகின்றனர். தமிழக ஆந்திர எல்லையான திருப்பத்தூர் மாவட்ட 5 எல்லைகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்

மருத்துவ பணிகளுக்கும், தவிர்க்க முடியாத சூழ்நிலைக்கு செல்லக்கூடிய நபர்கள் மற்றும் ரயிலுக்கு செல்லுபவர்கள் அடையாள அட்டை காண்பித்த பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்

மேலும் வெளியில் வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்திருப்பத்தை காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து அதன் பின்னரே அனுப்பி வைக்கின்றனர்.

இதன் காரணமாக ஆள் நடமாட்டம் இன்றி வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெறிச்சோடி சாலைகள் காணப்படுகின்றன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!