நடிகர் விவேக் மறைவையொட்டி மரக்கன்று நடும் பணியை நிறைவேற்றி வரும் இளைஞர்கள்

நடிகர் விவேக் மறைவையொட்டி மரக்கன்று நடும் பணியை நிறைவேற்றி வரும் இளைஞர்கள்
X
நாட்றம்பள்ளி அருகே நடிகர் விவேக் மறைவையொட்டி அவரது கனவு திட்டமான மரக்கன்று நடும் பணியை நிறைவேற்றி வரும் இளைஞர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சுண்ணாம்பு குட்டை பகுதியில் நடிகர் விவேக் பசுமை பாதுகாப்பு அமைப்பு சார்பில் நடிகர் விவேக்கின் மறைவை ஒட்டி இன்று சாலை ஓரம் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

இளைஞர் மோகன்ராஜ் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து மரக்கன்றுகளை நட்டு நடிகர் விவேக்கு நினைவு அஞ்சலி செலுத்தினர். அப்போது நினைவஞ்சலிகள் உறுதிமொழி ஏற்றுக் கொண்ட இளைஞர்கள், விவேக்கின் கனவை நினைவாக்கும் வகையில் இனி ஒவ்வொரு ஆண்டும் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு, அதை முறையாக பராமரித்து இயற்கையான சூழலை உருவாக்க உறுதி ஏற்போம் என கூறினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!