ஏலகிரிமலை சுற்றுலா தளத்தை மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்
ஏலகிரிமலை சுற்றுலா தளத்தை மேம்படுத்த மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. ஏலகிரிமலை ஊராட்சியில் பள்ளகனியூர் கிராமத்தில் தாவரவியல் பூங்கா அமைக்கவும், உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்கம் அமைத்திடவும். மேலும் நிலாவூர் கிராமத்தில் மலர்கள் பூங்கா மற்றும்படகு இல்லத்தை மேம்படுத்திடவும் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விளையாட்டு அரங்கம் அமைக்க நிலாவூரில் ஏற்கெனவே விளையாட்டு அரங்கம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடம் ஆட்சேபனை புறம்போக்கு இடமாக உள்ளதால் தற்போது பள்ளகனியூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பள்ளகனியூர் கிராமத்தில் உள் விளையாட்டு அரங்கும் 400 மீட்டர் ஓட்டப்பந்தய தளம், கால்பந்து விளையாட்டு தளம், கைப்பந்து விளையாட்டு தளம், ஹாக்கி தளம், கூடைபந்து விளாட்டு தளம், நீச்சல் குளம், கிரிகெட் பயிற்சி தளம், ஆகிய விளையாட்டு தளங்கள் அமையவுள்ளது. அந்த இடங்களின் போதிய சாத்திய கூறுகளை ஆய்வு செய்தார்
அதனை தொடர்ந்து ஏலகிரிமலை ஊராட்சி, பள்ளகனியூர் கிராமத்தில் தாவரவியல் பூங்காவிற்கு தேர்வான இடத்தில் சாத்திய கூறுகளை ஆய்வு செய்ய தோட்டக்கலை அலுவலர்களை கேட்டுக்கொண்டார்கள். பின்னர் நிலாவூர் உள்ள ஏரியை தூர்வாரி ஆழப்படுத்தவும் ஏரியை சுற்றிலும் மரக்கன்றுகள் நடவும், சிறுவர்கள் பூங்கர் அமைக்கவும், படகு இல்லமாக உருவாக்கவும், பொதுப்பணித்துறை அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் ஆணையிட்டார்.
ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு நிகராக ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்க்க ஒருங்கிணைந்த சுற்றுலா திட்டங்களை உள்ளடக்கி புதிய சுற்றுலா வசதிகளை அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்ய வேண்டும். இந்த திட்டத்தை செயல்பாட்டிற்கு ஒரிரு ஆண்டுகளில் கொண்டு வந்தால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் எனவே இதற்கான திட்ட அறிக்கையினை தயாரிக்க குழு அமைக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறினார்
இந்த ஆய்வின் போது தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மோகன், பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர் பிரபாகர், வட்டாட்சியர்கள், சிவபிரகாசம், ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்க பொருப்பாளர் ஜான் மறறும் வருவாய் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்...
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu