ஏலகிரிமலை செல்லும் சாலை விரிவுபடுத்தும் பணி: எம்.எல்.ஏ தேவராஜ் தொடங்கி வைத்தார்

ஏலகிரிமலை செல்லும் சாலை விரிவுபடுத்தும் பணி: எம்.எல்.ஏ தேவராஜ் தொடங்கி வைத்தார்
X

சாலை விரிவுபடுத்தும் பணியினை பூமி பூஜை செய்து எம்.எல்.ஏ தேவராஜ் தொடங்கி வைத்தார்

ஏலகிரிமலை செல்லும் சாலையை 3.9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவுபடுத்தும் பணியினை பூமி பூஜை செய்து எம்.எல்.ஏ தேவராஜ் தொடங்கி வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏலகிரி மலை பகுதிக்கு செல்லக்கூடிய பொன்னேரி கூட்ரோடு இருந்து ஏலகிரி மலை அடிவாரம் வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை விரிவுபடுத்த ரூபாய் 3 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் பணியினை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் பூமி பூஜை போட்டு தொடங்கி வைத்தார்

இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் வினாயகம், தலைமை செயற்குழு உறுப்பினர் பூ.சதாசிவம், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story