ஜோலார்பேட்டை ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கும் மழைநீருக்கு தீர்வு

ஜோலார்பேட்டை ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கும் மழைநீருக்கு தீர்வு
X

 ஜோலார்பேட்டை  ரயில்வே பாலத்தில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற  மின்மோட்டாரை எம்எல்ஏ தேவராஜி இயக்கி திறந்து வைத்தார்

ஜோலார்பேட்டை அருகே ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கும் மழைநீருக்கு தீர்வு கண்ட எம்எல்ஏ தேவராஜி. பொதுமக்கள் மகிழ்ச்சி

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பக்கிரிதக்கா - கட்டேரி பகுதியை இணைக்கும் பக்கிரிதக்கா இரயில்வே தரைப்பாலம் ஒன்று உள்ளது. இதில் மழைக்காலங்களில் தரைப்பாலத்தில் தண்ணீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் மற்றும் வழியாக செல்லக்கூடிய பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். இது பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத இருந்த நிலையில் இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி அவர்களை கடந்த 26 ஆம் தேதி குறைகளைக் கூறினர் அதனடிப்படையில் நேரில் சென்று பார்வையிட்டார்.

தரைப்பாலத்தில் தேங்கி உள்ள மழை நீரை உடனடியாக வடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நீரை அகற்றுவதற்கான நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கவும் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார் மற்றும் நகராட்சி ஆணையர் ராமஜெயம் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து தண்ணீரை வெளியேற்ற மின்மோட்டார் அமைத்து பணிகள் நிறைவு பெற்ற நிலையில் இன்று ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி மின்மோட்டாரை இயக்கி பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள் உடன் இருந்தார்கள்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil