நாட்றம்பள்ளி அருகே சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல்

நாட்றம்பள்ளி அருகே சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல்
X
நாட்றம்பள்ளி அருகே மூன்று சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டிக் கடத்தல். போலீசார் விசாரணை

நாட்றம்பள்ளி அருகே கூட்டுறவு சர்க்கரை ஆலை உற்பத்தி வளாகத்தில் இருந்த மூன்று சந்தன மரங்களை மர்ம நபர்கள் வெட்டிக் கடத்தி சென்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் செயல்பட்டுவரும் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை உற்பத்தி நிலைய வளாகத்தில் உள்ள சுமார் 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மூன்று சந்தன மரங்களை கடந்த 19 மர்ம நபர்களால் வெட்டி கடத்தி சென்றுள்ளனர்.

அன்று காலை காவலாளி பல் பகதூர் என்பவர் அவ்வழியாக வந்த போது மரம் சாய்ந்து இருப்பதை பார்த்து உள்ளார். அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து உடனடியாக உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் நேற்று நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!