புதுப்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா  விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

புதுப்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா  விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது
X

புதுப்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது 

புதுப்பேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா  விற்பனையில் ஈடுபட்ட மூவரை கைது செய்து நாட்டறம்பள்ளி போலிசார் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகாவுக்கு உட்பட்ட புதுப்பேட்டை பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி புகார் வந்தவண்ணம் இருந்தது.

இதனையடுத்து நாட்றம்பள்ளி போலீசார் புதுப்பேட்டை பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது 3 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா ஆண்ஸ் ஆகியவை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது அதனை தொடர்ந்து குட்கா பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்து விற்பனையில் ஈடுபட்ட மூன்று நபர்களை கைது செய்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!