ஜோலார்பேட்டை அருகே சர்வேயர் தூக்கிட்டு தற்கொலை, போலிசார் விசாரணை

ஜோலார்பேட்டை அருகே சர்வேயர் தூக்கிட்டு தற்கொலை,  போலிசார் விசாரணை
X

ஜோலார்பேட்டையில் தற்கொலை செய்து கொண்ட சர்வேயர்.

ஜோலார்பேட்டை அருகே சர்வேயர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் திலீபன் (வயது 33) இவர் திருப்பத்தூர் அடுத்த கொரட்டி பகுதியில் சர்வேயராக பணியாற்றி வந்துள்ளார்.

இவருக்கும் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் திவ்யா என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் இன்று கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் விரக்தியடைந்த திலீபன் வீட்டில் தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை? செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திலீபன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ஜோலார்பேட்டை அருகே அரசு அதிகாரி திருமணமாகி 7 மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை? செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

Tags

Next Story
ai and future cities