/* */

ஜோலார்பேட்டை சரக்கு ரயில் பணிமனையில்  மேற்கூரை பழுதடைந்துள்ளது

ஜோலார்பேட்டை சரக்கு ரயில் பணிமனையில்  மேற்கூரை பழுதானதால் கனமழை காரணமாக சுமார் 50 கோடி மதிப்பிலான இயந்திரங்கள் பழுதாக வாய்ப்புள்ளது

HIGHLIGHTS

ஜோலார்பேட்டை சரக்கு ரயில் பணிமனையில்  மேற்கூரை பழுதடைந்துள்ளது
X

மழைநீர் மேற்கூரை வழியாக வழிந்து ஜோலார்பேட்டை சரக்கு ரயில் பணிமனைக்குள் வருகிறது

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகே வேகம் பணிமனை உள்ளது, இந்த பணிமனையில் சுமார் 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

பணிமனையில் பழுதடைந்து இருக்கக்கூடிய சரக்கு ரயில் சக்கரங்கள் மற்றும் பெட்டிகளை சரி செய்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வருவார்கள். அதற்காக சுமார் 50 கோடி மதிப்பிலான இயந்திரங்கள் அந்த பணிமனையில் உள்ளது. ஆனால் பணிமனையில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை முற்றிலும் பழுதாகி உள்ளது.

தற்போது ஒரு வார காலமாக மாலை நேரங்களில் கனமழை பெய்வதால், மழைநீர் மேற்கூரை வழியாக வழிந்து பணிமனை இயந்திரங்கள் பழுதாகும் வாய்ப்புள்ளதாக அங்குள்ள ஊழியர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

உடனடியாக தென்னக ரயில்வே உயரதிகாரிகள் இதன் மீது கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே பணிமனையில் பணிபுரியும் ஊழியர்களின் மனக்குமுறல் ஆக உள்ளது

Updated On: 4 July 2021 12:19 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  4. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  5. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  6. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  7. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  8. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு