கனமழையின் காரணமாக தண்டவாளம் தண்ணீரில் மூழ்கியது. ரயில்கள் தாமதம்

கனமழையின் காரணமாக தண்டவாளம் தண்ணீரில் மூழ்கியது. ரயில்கள் தாமதம்
X

ஜோலார்பேட்டை ரயில்நிலையத்தில் கனமழை காரணமாக தண்டவாளங்கள் நீரில் மூழ்கின

ஜோலார்பேட்டையில் நேற்று இரவு விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக தண்டவாளத்தில் தண்ணீரில் மூழ்கியதால் ரயில்கள் தாமதமாக சென்றது

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பெய்த தொடர் மழையின் காரணமாக ஜோலார்பேட்டை இரயில் நிலைய சந்திப்பில் 3 மற்றும் 4-வது நடைமேடைகளில் குளம் போல தண்ணீர் தேங்கி நின்றது.

இதன் காரணமாக காலை 5 மணிக்கு புறப்பட்ட வேண்டிய ஏலகிரி எக்ஸ்பிரஸ் ஒரு மணி நேரம் காலதாமதமாக 6 மணிக்கு புறப்பட்டு சென்றது. மேலும் இந்த மார்க்கத்தில் பெங்களூர் அதாதியா பயணிகள் ரயில் ஒரு மணி நேரம் காலதாமதமாகவும் மற்றும் சேலம் மார்க்கமாக செல்லக்கூடிய அனைத்து ரயில்களும் காலதாமதமாக சென்றன.

தண்டவாளத்தில் தேங்கிய தண்ணீரை நீர் உறிஞ்சும் மோட்டார் மூலம் தண்ணீரை அப்புறப்படுத்திய பின்னர் ரயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றன

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்