ஏலகிரி மலை விடுதிகளில் தனிப்படை போலீசார் திடீர் சோதனை

ஏலகிரி மலை விடுதிகளில் தனிப்படை போலீசார் திடீர் சோதனை
X

ஏலகிரி தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொண்ட போலீசார்

ஏலகிரி மலையில் உள்ள விடுதிகளில் சட்டவிரோத செயல்களில் நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து தனிப்படை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை உள்ளது தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் இருந்து மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக ஒரு அரசு தங்கும் விடுதிகள் மற்றும் தனியார் தங்கும் விடுதிகள் சொகுசு பங்களா என 100-க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் உள்ளனர். இதுபோன்ற தங்கும் விடுதியில் ஒரு சில நபர்களால் விடுதிகளில் சட்டத்துக்குப் புறம்பாக மசாஜ் என்ற பெயரில் விபச்சாரத் தொழில் உள்ளிட்ட ஈடுபடுவதாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனுக்கு தகவல் கிடைத்ததன்.

அதன்பேரில் ஏலகிரி மலையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகள் சோதனை மேற்கொள்ள உத்தரவிட்டதை தொடர்ந்து 6 தனிப்படை போலீசார் திடீரென ஏலகிரி மலையில் உள்ள அரசு மற்றும் தனியார் தங்கும் விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்

மேலும் அனைத்து விடுதிகளில் ஆய்வு செய்த போலீசார் எவ்வித சட்ட விரோத செயல்களும் நடைபெறவில்லை என கூறினர். மேலும் அனைத்து தங்கும் விடுதிகளில் உரிமையாளர்களுக்கு மேலாளர்களுக்கு சட்டவிரோத செயல்கள் நடைபெற்றால் விடுதிகளுக்கு சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்துத்தனர்

ஏலகிரி மலையில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் திடீரென போலீசார் சோதனை மேற்கொண்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

Tags

Next Story
ai marketing future