நாட்றம்பள்ளி அருகே வெளிமாநில மதுபானம் விற்ற வாலிபர் கைது

நாட்றம்பள்ளி அருகே வெளிமாநில மதுபானம் விற்ற வாலிபர் கைது
X

நாட்றம்பள்ளி அருகே கர்நாடக மாநில மதுபாட்டில்களை விற்ற வாலிபர் 

நாட்றம்பள்ளி அருகே வெளிமாநில மதுபானம் விற்ற வாலிபரை கைது செய்த நாட்றம்பள்ளி போலீசார், 120 மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்காவுக்கு உட்பட்ட சோமநாயக்கன்பட்டி பகுதியில் கர்நாடக மாநில மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக நாட்றம்பள்ளி காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜான் பாஷா (வயது 34) என்ற நபர் தனது கடையில் கர்நாடக மாநில மதுபானங்கள் பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அவரை கைது! செய்து அவரிடமிருந்து 120 கர்நாடக மது பாட்டில்களை பறிமுதல் செய்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது