புதுப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம்

புதுப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில்  குழந்தைகளுக்கு தடுப்பூசி முகாம்
X

புதுப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சல் தடுப்பூசி முகாமை கலெக்டர், எம்எல்ஏக்கள் துவக்கி வைத்தனர்

புதுப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சல் தடுப்பூசி முகாமை கலெக்டர், எம்எல்ஏக்கள் துவக்கி வைத்தனர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிமோனியா மற்றும் மூளை காய்ச்சல் நோய்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான நியூமோகோக்கல் கான்ஜிகேட் (CPV) தடுப்பூசி செலுத்த முகாமினை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, ஜோலார்பேட்டை எம்எல்ஏதேவராஜ், திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி, ஆம்பூர் எம்எல்ஏ வில்வநாதன் ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர்.

அதனை தொடர்ந்து கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது அதனைத் தொடர்ந்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துக்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன.

இதில் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் செந்தில், வட்டார மருத்துவ அலுவலர் மீனாட்சி, மருத்துவர்கள் அரசு அதிகாரிகள், செவிலியர்கள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்..

Tags

Next Story