ஜோலார்பேட்டையில் தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்

ஜோலார்பேட்டையில் தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம்
X

ஜோலார்பேட்டையில் தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு எம்எல்ஏ தேவராஜி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

ஜோலார்பேட்டையில் பெரியாரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் திமுக எம்எல்ஏ தேவராஜ் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் தந்தை பெரியாரின் 143- வது பிறந்தநாள் முன்னிட்டு ஜங்ஷன் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருவுருவச் சிலைக்கு வேலூர் மேற்கு திமுக (திருப்பத்தூர்) மாவட்ட பொறுப்பாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் அதே பகுதியில் ஜோலார்பேட்டை நகர திராவிட கழகம் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த தந்தை பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் மு.மாவட்ட பொறுப்பாளர் ம.முத்தமிழ்ச்செல்வி, ஜோலார்பேட்டை நகர பொறுப்பாளர் ம.அன்பழகன், திராவிட கழக மாவட்ட செயலாளர் கே.சி.எழிலரசன், மதிமுக மாவட்டச் செயலாளர் வ.கண்ணதாசன், காங்கிரஸ் முன்னோடி ஏலகிரி வி.செல்வம், திமுக மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சி.கவிதாதண்டபாணி மற்றும் திமுக நிர்வாகிகள், திராவிட கழக நிர்வாகிகள், மதிமுக, விடுதலை கட்சியினர் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!