நாட்றம்பள்ளி அருகே தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபரின் சடலம் மீட்பு 

நாட்றம்பள்ளி அருகே தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபரின் சடலம் மீட்பு 
X
நாட்றம்பள்ளி அருகே மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபரின் சடலம் மீட்பு  கொலையா? தற்கொலையா? போலீசார் விசாரணை..

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா உட்பட்ட வெக்கல்நத்தம் ஊராட்சி லட்சுமிபுரம் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் புளியமரத்தில் தூக்கில் தொங்கியபடி சடலமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் நாட்றம்பள்ளி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இறந்த வாலிபர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்னகல்லுபள்ளி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் விக்னேஷ் (வயது 30) என தெரியவந்தது. எதற்காக இந்த பகுதிக்கு வந்தார் இவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்ரா என இரு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்...

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!