கந்திலியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகளிடம் ஆலோசனை

கந்திலியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகளிடம் ஆலோசனை
X

கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கந்திலி ஊராட்சிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினர்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, வட்டார வளர்ச்சி அலுவலர், துறை அதிகாரிகள் மற்றும் ஊராட்சி செயலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் ருடன்

இக்கூட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், அரசின் நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்துவது குறித்தும் குடிநீர் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்