ஜோலார்பேட்டை அருகே சாலைகளை சீரமைக்க எம்எல்ஏ தேவராஜ் உத்தரவு

ஜோலார்பேட்டை அருகே சாலைகளை சீரமைக்க  எம்எல்ஏ தேவராஜ் உத்தரவு
X

அங்கன்வாடி பள்ளி கட்டிடம் பழுதடைந்ததை பார்வையிட்ட எம்எல்ஏ தேவராஜ்

அங்கன்வாடி பள்ளி மற்றும் சாலைகளை சீரமைக்க பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து நேரில் சென்றுபார்வையிட்டார் எம்எல்ஏ தேவராஜ்

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பணியான்டப்பள்ளி அங்கன்வாடி பள்ளி கட்டிடம் பழுதடைந்ததையும், ஆதிதிராவிடர் காலனி மற்றும் பெருமாள் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் சாலைகள் பழுதடைந்து மழை நீர் தேங்கி உள்ளதாகவும் பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு புகார் தெரிவித்திருந்தனர்.

அதன் அடிப்படையில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி அங்கு நேரில் சென்று பார்வையிட்டு பின்னர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் சதிஷ்குமார் உடன் இருந்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!