ஏலகிரி மலை கிராமத்தில் தடுப்பூசி முகாமை சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்

ஏலகிரி மலை கிராமத்தில் தடுப்பூசி முகாமை சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்
X

ஏலகிரி மலை கிராமத்தில் தடுப்பூசி முகாமை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் தொடங்கி வைத்தார்

ஏலகிரி மலை கிராமத்தில் 18 வயதிலிருந்து மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி முகாமை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் தொடங்கி வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை நிலாவூர் கிராமம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 18 வயது முதல் 44 வயது வரையிலான நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் தொடங்கி வைத்தார். இதில் ஆர்வமுடன் கிராம மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவனருள், வட்டாட்சியர் சிவபிரகாசம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேம்குமார், சங்கர், வட்டார மருத்துவ அலுவலர் மீனாட்சி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் என பலரும் உடன் இருந்தார்கள்.

Tags

Next Story