ஜோலார்பேட்டையில் பேவர் பிளாக் சாலை: எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்

ஜோலார்பேட்டையில்  பேவர் பிளாக் சாலை: எம்எல்ஏ   அடிக்கல் நாட்டினார்
X

ஜோலார்பேட்டையில்  பேவர் பிளாக் சாலை அமைக்க அடிக்கல் நாட்டிய எம்எல்ஏ தேவராஜ்

ஜோலார்பேட்டையில் 2 கோடியே 60 லட்சம் மதிப்பிலான பேவர் பிளாக் சாலையை அமைக்க ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் அடிக்கல் நாட்டினார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகர பகுதி மக்கள் நீண்ட நாளாக சாலை வசதிகள் இன்றி தவித்து வந்தனர் இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு அளித்து வந்துள்ளனர்.

இதனை கருத்தில் கொண்ட ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் கலைஞர் நகர்புற மேம்பாடு திட்டத்தின் கீழ் 2 கோடியே 60 லட்சம் மதிப்பிலான சுமார் 3.5 கிலோ மீட்டர் அளவிலான பேவர் பிளாக் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது இதன் காரணமாக மேட்டுச்சக்கரகுப்பம் முதல் பேவர் சாலை அமைக்க எம்எல்ஏ தேவராஜ் அடிக்கல் நாட்டினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ்செல்வி, நகர பொறுப்பாளர் அன்பழகன், ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையர் பழனி, கழகத் தொண்டர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்