ஜோலார்பேட்டையில் எரிவாயு தகன மேடை: எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்
எரிவாயு தகன மேடைக்கான பூமிபூஜையை தொடங்கி வைத்த எம்எல்ஏ தேவராஜ்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே நுண் உர செயலாக்க மையம் பகுதியில் எரிவாயு தகனமேடைக்கான பூமிபூஜையை எம்எல்ஏ தேவராஜ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
ஜோலார்பேட்டை தொகுதி மக்களின் நீண்ட நாட்களாக ஜோலார்பேட்டை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சரியான சுடுகாடு இல்லை இறப்பவர்களை எரிக்க ஜோலார்பேட்டை பகுதியில் தகன மேடை வேண்டும் எனப் பல நாட்களாக மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதன் காரணமாக எரிவாயு தகனமேடையை அமைக்க ஜோலார்பேட்டை நகராட்சி மூலமாக ஈரோடு சேர்ந்த பிரபல நெப்டியூன் ஆட்டோமேஷன் நிறுவனத்திற்கு 1.50 கோடி மதிப்பீட்டில் 3500 சதுர பரப்பளவில் ஆறு மாத காலத்தில் எரிவாயு தகன மேடை அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று அடிக்கல் நாட்டி பூமி பூஜை போடப்பட்டது. பின்னர் நுண் உர செயலாக்கம் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்
இதில் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ் செல்வி ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையர் பழனி, மற்றும் அரசு அதிகாரிகள் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu