ஏலகிரிமலை பள்ளிகளில் எம்எல்ஏ தேவராஜ் ஆய்வு

ஏலகிரிமலை பள்ளிகளில்  எம்எல்ஏ தேவராஜ் ஆய்வு
X

மழை காரணமாக சேதமடைந்த கட்டடங்களை பார்வையிட்ட எம்எல்ஏ 

ஏலகிரிமலை பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி, நியாய விலை கடை ஆகியவற்றை எம்எல்ஏ தேவராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றியம், ஏலகிரிமலையில் மங்களம், நிலாவூர், கோட்டூர், அத்தனாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி பள்ளிகள், மங்களம் நியாய விலை கடை ஆகிய இடங்களில் ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜி ஆய்வு மேற்கொண்டார்.

பருவமழை காரணமாக சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை பார்வையிட்டு அதனை சரி செய்ய அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். மேலும் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டு, கோரிக்கைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட கவுன்சிலர் சிந்துஜா, ஒன்றிய கவுன்சிலர்கள் செந்தில்குமார், சிவபிரகாசம், பொன்னுரங்கம் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!