மல்லகுண்டா பகுதியில் மரக்கன்றுகள் வளர்ப்பு பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு

மல்லகுண்டா பகுதியில் மரக்கன்றுகள் வளர்ப்பு பணிகள் குறித்து அமைச்சர் ஆய்வு
X

மல்லகுண்டா பகுதியில், மரக்கன்றுகள் வளர்க்கும் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் பெரிய கருப்பன்  

மல்லகுண்டா பகுதியில் மரக்கன்றுகள் வளர்க்கும் பணிகள் குறித்து தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு மேற்கொண்டார்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்காவிற்கு உட்பட மல்லகுண்டா பகுதியில், தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆகியோர் ஊரக வளர்ச்சி துறை சார்பில் 5 ஏக்கர் பரப்பளவில் மரக்கன்றுகள் வளர்க்கும் பணிகள், தீவன பயிர்கள் வளர்க்கும் பணிகள், மரம் நடும் பணியை ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டனர்

இதில் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், நல்லதம்பி, வில்வநாதன், மற்றும் மாவட்ட மகளிரணி ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், மேற்கு மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!