மாற்றுத்திறனாளிக்கான உபகரணங்கள் வழங்குவதற்கான மருத்துவ ஆலோசனை முகாம்

மாற்றுத்திறனாளிக்கான உபகரணங்கள் வழங்குவதற்கான மருத்துவ ஆலோசனை முகாம்
X

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ உபகரணங்களின் அளவீடுகள் மற்றும் பயனாளிகளை தேர்வு செய்யும் சிறப்பு முகாம் 

ஜோலார்பேட்டையில் மாற்றுத்திறனாளிக்கான உபகரணங்கள் வழங்குவதற்கான மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது

திருப்பத்தூர் மாவட்டம், திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதி, ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு மாற்றுத்திறனாளிக்கான ADIP திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினரும், ALIMCO நிறுவனமும், திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ உபகரணங்களின் அளவீடுகள் மற்றும் பயனாளிகளை தேர்வு செய்யும் சிறப்பு முகாம் ஜோலார்பேட்டையில் உள்ள ராஜராஜேஸ்வரி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது

நிகழ்வில் ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகள் அவரவர்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் வழங்குவது குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று பயன்பெறும் வகையில் முகாம் நடைபெற்ற இந்த முகாமில் நேரடியாக மருத்துவர்கள் அவர்களுக்கு மாற்றுத் திறனாளிகளுக்கு என்னென்ன பாதிப்புகள் உள்ளன அதற்கான அவர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன

இந்நிகழ்வில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் இதில் கூடுதல் ஆட்சியர், திட்ட இயக்குநர் செல்வராசு, திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சூரியகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!