நாட்றம்பள்ளி அருகே மினி லாரியில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்

நாட்றம்பள்ளி அருகே மினி லாரியில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்
X

நாட்றம்பள்ளி அருகே மினி லாரியில் கடத்தப்பட்ட 4 டன்  ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது

நாட்றம்பள்ளி அருகே மினி லாரியில் கடத்தப்பட்ட 4 டன்  ரேஷன் அரிசியை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர். ஓட்டுனர் தப்பி ஓட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே ரேஷன் அரிசி கடத்துவதாக மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் விஜயன் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் வருவாய்த்துறையினர் பச்சூர் அடுத்த கொண்டகிந்தனப்பள்ளி அருகே சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியே ஆந்திராவுக்கு கடத்திச் செல்ல 4 டன் ரேஷன் அரிசியுடன் ஒரு மினி லாரி வந்து கொண்டிருந்தது. வருவாய்த்துறையினர வருவதைக் கண்ட ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார்

அதனை தொடர்ந்து லாரியை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். ரேஷன் அரிசி கடத்தியது யார் எங்கிருந்து வந்தது என்பது குறித்து வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!