திரியாலம் பகுதியில் குழந்தை இறந்த ஏக்கத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை

திரியாலம் பகுதியில் குழந்தை இறந்த ஏக்கத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை
X
திரியாலம் பகுதியில் குழந்தை இறந்த ஏக்கத்தில் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து திருப்பத்தூர் சப் கலெக்டர் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட திரியாலம் ஊராட்சி டிவி துரைசாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் கட்டிட மேஸ்திரி இவரது மனைவி கவுதமி (வயது 23). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு கவுதமிக்கு பிரசவத்தின் போது பெண் குழந்தை பிறந்து அதன்பின் இறந்துவிட்டது.

இதில் மனவேதனையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கவுதமி மனநலம் பாதிக்கப்பட்ட நபர் போல் இருந்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் கவுதமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எலி மருந்தை குடித்து மயங்கிய நிலையில் இருந்துள்ளார். கவுதமியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கவுதமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது தந்தை கோபாலகிருஷ்ணன் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஜோலார்பேட்டை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கவுதமிக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்கள் மட்டுமே ஆவதால் திருப்பத்தூர் சப் கலெக்டர் அலர்மேல் மங்கை நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!