திருப்பத்தூரில் காவல்துறை சார்பில் பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஓட்டம்
காவல்துறை சார்பில் திருப்பத்தூரிலிருந்து நாடறம்பள்ளி வரை நடைபெற்ற பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஓட்டம்
திருப்பத்தூரிலிருந்து நாடறம்பள்ளி வரை பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஓட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த தாமலேரிமுத்தூர் மேம்பாலம் முதல் நாட்றம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வரை சுமார் 12 கிலோமீட்டர் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு ஓட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த விழிப்புணர்வு மினி மாரத்தானில் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தலிங்கம் உட்பட சுமார் 100 க்கும் மேற்பட்ட ஆண் பெண் காவலர்கள் கலந்துகொண்டனர்.இறுதியாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு ஓட்டத்தை முடித்துக்கொண்டு உடற்பயிற்சி மேற்கொண்ட பின்பு தொடர்ந்து 12 கிலோமீட்டர் தன்னுடன் இடைவிடாமல் வந்த 2 பெண் காவலர்களுக்கு ஊக்குவிக்கும் விதமாக பரிசு வழங்கினார்
பின்னர் செய்தியாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:.இந்த மினி மராத்தான் ஓட்டம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் காவலர்களின் உடல்தகுதி மேம்படவும் நடத்தப்பட்டது. மேலும் பெண் குழந்தைகள் மீது ஆசிரியர்களும் பெற்றோர்களும் தனி கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டும்.
ஏனென்றால் கொரோனா காலகட்டத்தில் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் ஆன்லைன் வகுப்பு நடத்தப் படுவதால் மிக எளிதாக அவர்கள் தவறான பாதைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. பெண் பிள்ளையை பெற்றெடுக்க வேண்டும் என்றால் மா தவம் இருக்க வேண்டும் என்று பாரதி கூறியது போல நம்முடைய தாயும் பெண் பிள்ளையும் பெண் என்பதை மனதில் வைத்து பெற்றோர்கள் தங்களுடைய பெண் குழந்தைகள் மீது கவனமாக இருந்து அவர்களுடன் நட்பாகப் பழகி பேசி பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu