பரோலில் வந்துள்ள பேரறிவாளனுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

பரோலில் வந்துள்ள பேரறிவாளனுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது
X

பரோலில் வந்துள்ள பேரறிவாளனுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது

பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டைக்கு அழைத்து வரப்பட்டார்.

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் பேரறிவாளன், அவருடைய தாயார் அற்புதம்மாள் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை ஒன்றை வைத்தார். அந்தக் கோரிக்கையில் புழல் சிறையில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருப்பதால் தனது மகனுக்கு நீண்ட நாள் விடுப்பு வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதனை ஏற்று தமிழக முதலமைச்சர் 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த 28 ஆம் தேதி சென்னை புழல் சிறையில் இருந்து பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டைக்கு 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் பேரறிவாளனின் வீட்டிற்கு 40க்கு மேற்பட்ட போலிசார் பாதுகாப்பு உடன் அழைத்துவரப்பட்டனர்.

பல ஆண்டுகளாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன், சிறுநீரக நோய் தோற்று காரணமாக சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக , கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் மத்திய சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் இன்று அவரது வீட்டிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் அருகில் கொரோனா சிறப்பு தடுப்பூசி போடும் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு கோ சில்டு முதல் தவணை தடுப்பு ஊசி அவருக்கு போடப்பட்டது.. அதனை தொடர்ந்து சிறிது நேரம் கழித்து மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் அவரது வீட்டிற்கு அழைத்து வரப்பட்டது...

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!