வேலூர் மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் ஜோலார்பேட்டையில் நடைபெற்றது

வேலூர் மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் ஜோலார்பேட்டையில் நடைபெற்றது
X

வேலூர் மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் ஜோலார்பேட்டையில் நடைபெற்றது

ஜோலார்பேட்டையில் வேலூர் மேற்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் க.தேவராஜ் தலைமையில் நடைபெற்றது

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்ற கட்சி அலுவலகத்தில் வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜ் தலைமையில் அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் ஒன்றிய, நகர பேரூராட்சி செயலாளர்கள் கலந்துகொண்டு வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து நிர்வாகிகளும் ஒன்றுபட்டு வேலூர் மேற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றிய வார்டுகளில் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிபெறச் செய்யவேண்டுமென நிர்வாகிகளுக்கு மாவட்ட பொறுப்பாளர் அறிவுரை வழங்கினார்.

இக்கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சூரியகுமார், வேலூர் மேற்கு மாவட்ட அவை தலைவர் ஆனந்தன், இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்..

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!