ஜோலார்பேட்டையில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ தேவராஜ்

ஜோலார்பேட்டையில் மக்களை சந்தித்து குறைகளை  கேட்டறிந்த எம்எல்ஏ தேவராஜ்
X

ஜோலார்பேட்டையில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ தேவராஜ்

ஜோலார்பேட்டையில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மக்களை சந்தித்து அடிப்படை வசதிகள் மற்றும் குறைகளை எம்எல்ஏ தேவராஜ் கேட்டறிந்தார்

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பாச்சல் ஊராட்சியிலுள்ள சகாயநகர், என்.ஜி.ஓ. காலனி, எழில்நகர், பாச்சல் அங்கன்வாடி பள்ளி போன்ற இடங்களில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி நேரில் சென்று மக்களை சந்தித்தார்.

அப்போது அங்கு நிலவும் குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் குறைகளை கேட்டு அறிந்து உடனடியாக தீர்க்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ்ச்செல்வி, மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார் வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர், உதவி பொறியாளர் கார்த்திகேயன் மற்றும் பலரும் உடன் இருந்தார்கள்..

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்